மேலும்

நாள்: 18th October 2016

‘கோத்தாவின் போர்’: எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

தாம் எதிர்பார்த்தது போன்று கோத்தாவின் போர் நூல் பிரபலமடையவில்லை என்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்க சந்தேகநபரை சுட்டுக்கொன்ற மேஜர் 20 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தினார்

தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி, கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி, 20 இலட்ச ரூபா இழப்பீடு செலுத்தினார்.

பிரதம நீதியரசர் வசம் நாட்டு நிர்வாகம் இருக்கவில்லை – சபாநாயகர் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர், பிரதமர், சபாநாயகர் ஆகியோர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், பிரதம நீதியரசர் சிறீபவனே சிறிலங்கா அரச நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்ததாக வெளியான தகவலை சபாநாயகர் மறுத்துள்ளார்.

கோல் ஊன்றிப் பாய்தலில் யாழ். மாணவன் புதிய சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த சிறிலங்கா பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர்.

வடக்கின் நிலைமைகள் – மோடிக்கு விபரித்தார் மைத்திரி

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கிக் கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கு 2623 கோடி ரூபா இராணுவ உதவி, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் – சீனா இணக்கம்

சிறிலங்காவுக்கு சுமார் 2623 கோடி ரூபா (120 மில்லியன் யுவான்) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவும், ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.