மேலும்

பல்கலைக்கழக மாணவர்களின் முற்றுகையில் சிக்கிய யாழ். மாவட்டச் செயலகம், ஆளுனர் செயலகம்

jaffna-students-protest-12கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு விரைவான நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தையும், வடமாகாண ஆளுனர் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இன்று காலையிலேயே யாழ். மாவட்டச் செயலக நுழைவாயில்கள் மற்றும் ஆளுனர் செயலக நுழைவாயில்களை ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மறித்து போராட்டம் நடத்தினர்.

அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியபடி மாணவர்கள் வாயில்களில் அமர்ந்திருந்ததால், மாவட்டச் செயலகம், ஆளுனர் செயலகங்களுக்குள் அதிகாரிகளும் பணியாளர்களும் நுழைய முடியவில்லை.

நண்பகல் 12 மணிவரையில், கடும் மழைக்கும் மத்தியில் மாணவர்கள் இந்த மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இறுதியில், மாணவர்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் நடத்தியதால், அந்த வீதி வழியாக போக்குவரத்து முடங்கியது.

எனினும், அந்த இடத்துக்கு சீருடை அணிந்த காவல்துறையினர் எவரும் வரவில்லை. எனினும் சிவில் உடையில் காவல்துறையினரும், புலனாய்வாளர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

jaffna-students-protest-1jaffna-students-protest-2jaffna-students-protest-4jaffna-students-protest-5jaffna-students-protest-6jaffna-students-protest-7jaffna-students-protest-8jaffna-students-protest-9jaffna-students-protest-10

jaffna-students-protest-12

jaffna-students-protest-13jaffna-students-protest-14மதியம் 12 மணியளவில், தமது போராட்டத்தை முடித்துக் கொண்ட மாணவர்கள் யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனிடம் மனுவைக் கையளித்தனர்.

இதையடுத்து, ஏ-9 வீதி வழியான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

அதேவேளை, கிளிநொச்சியிலும் இன்று பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள் பங்கேற்ற கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *