மேலும்

நாள்: 6th October 2016

சிறிலங்காவின் எரிபொருள் கேந்திரங்களைக் குறிவைக்கும் இந்தியா

திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

விக்கியின் குற்றச்சாட்டு – விசாரணை நடத்தக் கோருவது குறித்து கூட்டமைப்பு ஆலோசனை

தன்னைக் கொலை செய்வதற்கு சிறிலங்காவின் தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை நடத்துமாறு சிறிலங்கா அதிபரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா உறவுகள் இராஜதந்திர எல்லைகளுக்கு அப்பாற்பட்டது – நரேந்திர மோடி

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் இராஜதந்திர எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்தப் பிணைப்பு, இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் மேலும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு எதிரான இரகசிய நடவடிக்கை – இராணுவத்துக்கு தெரியாதாம்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகங்களுக்கு எதிராக எந்த இரகசிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியாது என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

ரணிலைச் சந்திக்க வெளியே வந்தார் சோனியா காந்தி

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை, சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐ.நா பொதுச்செயலராகிறார் அன்ரனியோ குட்டெரெஸ்

ஐ.நாவின் புதிய பொதுச்செயலராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குட்டெரெஸ் இன்று அதிகாரபூர்வமாகத் தெரிவு செய்யப்படவுள்ளார்.