மேலும்

நாள்: 8th October 2016

25 நாட்கள் சீனாவில் தங்கவுள்ள கோத்தா

சீனாவில் நடக்கும் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அங்கு, 25 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில் விக்னேஸ்வரன் தலையிட முடியாது- ரணில்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட எந்த முதலமைச்சராலும், தலையீடு செய்ய முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ஜப்பானிய போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடல் தற்காப்புப் படையின் போர்க்கப்பல்களான, கஷிமா, செடோயுகி, அசாகிரி ஆகியனவே கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

தாய்லாந்து சென்றார் சிறிலங்கா அதிபர்

ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தாய்லாந்து சென்றடைந்தார்.