மேலும்

நாள்: 30th October 2016

சிறிலங்கா அதிபரைச் சந்திக்க அனுமதி கோரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாகவே சிறிலங்கா அதிபரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்குமாறு சிறிலங்காவிடம் இந்தியா கோரிக்கை

எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலிக்கு மேற்காக 454 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

நீதித்துறை குறித்து அவதூறு பரப்பிய தமிழ் இணையத்தளத்துக்கு சிறிலங்காவில் தடை

வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது.

போர் தொடர்பாக ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய நூலை வெளியிட்டார் மகிந்த

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய, ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்’ என்ற நூல் நேற்று முன்தினம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

லசந்த படுகொலை – 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை விசாரிக்கத் திட்டம்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அனுமமதி கோரியுள்ளது.