மேலும்

நாள்: 26th October 2016

‘நிமலராஜனைக் காப்பாற்றத் தவறிவிட்டேன்’ – பிரியத் லியனகே

மயில்வாகனம் நிமலராஜன் என்ற பெயரானது மத்திய லண்டனில் உள்ள பி.பி.சி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெவ்வேறு நிலையிலுள்ள பணியாளர்களால் ஒவ்வொரு நாளும் பேசப்படும் ஒரு பெயராக மாறியுள்ளது. மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்.

மாணவர்கள் கொலை – விசாரணை பற்றிய தகவல்களை வெளியிடத் தடை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று, சிறிலங்கா காவல்துறை கண்டிப்பான உத்தரவை அதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் தவறுகளை இழைத்துள்ளனர் – ஒப்புகொள்கிறார் காவல்துறை மா அதிபர்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் பல தவறுகளை இழைத்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்ற மாணவர்கள் முன்னால் இருந்து சுடப்பட்டது எப்படி? – சம்பந்தன் கேள்வி

யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஆவா குழு குறித்து விசாரணை- சட்டத்தை கையில் எடுக்க விடமாட்டோம் என்கிறது காவல்துறை

சுன்னாகத்தில் சிறிலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு உரிமை கோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் நேற்றிரவு பதற்றம் – வீதியில் ரயர்கள் எரிப்பு

கிளிநொச்சியில் நேற்றிரவு வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு நடத்தப்பட்ட போராட்டத்தினால், பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், பதற்றமான நிலை காணப்பட்டது.

ஆனைக்கோட்டையில் மர்மநபர்களின் வாள்வெட்டுக்கு 3 இளைஞர்கள் காயம்

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை  செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படட அதேவேளை, நேற்றிரவு இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் வந்தவர்கள் மூன்று இளைஞர்களை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.