மேலும்

நாள்: 1st October 2016

கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தார் யாழ்.வீராங்கனை அனிதா

சிறிலங்காவின் 42 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனிதா, கோல் ஊன்றிப் பாய்தல் பிரிவில் தேசிய மட்டச் சாதனையை முறியடித்தார்.

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை – லால் விஜயநாயக்க

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று, அரசியலமைப்பு திருத்தத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக, அந்தக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச விபத்தில் காயம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, விளையாட்டு நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மாரடைப்பால் மரணம்

வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று காலை மாரடைப்பினால் மரணமானார். இன்று காலை அவர் முல்லைத்தீவில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது.

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கோத்தா

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று, நீதிமன்றக் காவல் கூண்டுக்குள் சிறிது நேரம் அடைத்து வைக்கப்பட்டார்.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தொடர வேண்டும் – மல்வத்தை மகாநாயக்கர்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

தகவல் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் உரிமை ஆணைக்குவுக்கான ஐந்து உறுப்பினர்களின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.