மேலும்

மாதம்: September 2016

அனைத்துலக அரங்கிற்கு விரிவடையும் மைத்திரி – ரணில் பனிப்போர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத் தூண்டியது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்காவின் உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் ஜோன் கெரிக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

பாரிய கப்பல்களை நிறுத்துவதற்காக திருமலை கடற்படைத் தளத்தில் புதிய இறங்குதுறை

திருகோணமலை கடற்படைத் தளத்தில் பாரிய கப்பல்கள் தரித்து நிற்கும் வகையில் புதிய இறங்குதுறை ஒன்றைக் கட்டுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

வவுனியாவில் இன்று விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டம்- பொது பலசேனா ஏற்பாடு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக  பொது பலசேனா அறிவித்துள்ளது.

பிரபல கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் காலமானார்

யாழ்ப்பாணத்தின் இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் உக்ரேன் காட்டுப் பகுதியில் காலமானார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அரசியலில் புதிதாக உருவாகவுள்ளது தேசிய இராணுவக் கட்சி

எதிர்வரும் தேர்தல்களில் தேசிய இராணுவ கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி போட்டியிடவுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன  தெரிவித்தார்.

பென்ரகனில் சிறிலங்கா கடற்படைத் தளபதி – அமெரிக்கத் தளபதிகளுடன் கலந்துரையாடல்

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகமான பென்ரகனுக்குச் சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, அமெரிக்க படைத் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு எதிராக மூவினத்தவர்களும் ஒன்றிணைய வேண்டும் – அஜித் பெரேரா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது – பான் கீ மூனின் பேச்சாளர்

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை, தேசிய நலன்களைப் பாதுகாக்க தயார் நிலையில் இருக்கிறோம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருக்கிறது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

விக்கியின் இனவாதக் கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட இனவாதக் கருத்துக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.