மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவன் கஜனின் உடல் கிளிநொச்சியில் அடக்கம்

kajan-funeral-1கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள மாணவன் கஜனின் இல்லத்தில் இன்று காலை கிறிஸ்தவ மதப் பிரார்த்தனைகளையடுத்து, கஜனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

kajan-funeral-1kajan-funeral-2kajan-funeral-3kajan-funeral-4kajan-funeral-5kajan-funeral-6

முன்னதாக இல்லத்தில் நடந்த அஞ்சலி நிகழ்வில், ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்றிய பல்கலைக்கழக மாணவர்கள், அங்கு உரையாற்றிக் கொண்டிருந்த வட மாகாண பதில் முதலமைச்சர் குருகுலராஜாவிடம் இருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கி, அரசியல்வாதிகள் இங்கு அரசியல் நடத்த வேண்டாம் என்று தடுத்தனர்.

மாணவன் கஜனின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *