மேலும்

மாதம்: October 2016

ஆவா குழு குறித்து விசாரணை- சட்டத்தை கையில் எடுக்க விடமாட்டோம் என்கிறது காவல்துறை

சுன்னாகத்தில் சிறிலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு உரிமை கோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் நேற்றிரவு பதற்றம் – வீதியில் ரயர்கள் எரிப்பு

கிளிநொச்சியில் நேற்றிரவு வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு நடத்தப்பட்ட போராட்டத்தினால், பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், பதற்றமான நிலை காணப்பட்டது.

ஆனைக்கோட்டையில் மர்மநபர்களின் வாள்வெட்டுக்கு 3 இளைஞர்கள் காயம்

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை  செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படட அதேவேளை, நேற்றிரவு இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் வந்தவர்கள் மூன்று இளைஞர்களை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

போத்தலால் குத்தப்பட்டு சிறிலங்கா காவல்துறை அதிகாரி காயம் – கிளிநொச்சியில் பதற்றம்

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், சிறிலங்கா காவல்துறை சார்ஜன்ட் அதிகாரி ஒருவர் முகத்தில் போத்தலால் குத்தப்பட்டு காயமடைந்தார்.

முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடமாகாணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைகளைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்துக்கு நீதிகோரியும் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயலிழந்துள்ளது.

லண்டனில் புலிக்கொடியை ஏற்ற மறுத்தார் வடக்கு முதல்வர்

லண்டனில் புலிக்கொடி ஏற்றுவதற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மறுத்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் படுகொலை – ஒருவாரத்தில் விசாரணை அறிக்கை

கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில், சமர்ப்பிக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் படுகொலையை கண்டித்து வடக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பிரகீத் கடத்தல் வழக்கின் பிரதான சந்தேக நபர்களான புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.