மேலும்

நாள்: 24th October 2016

பல்கலைக்கழக மாணவர்களின் முற்றுகையில் சிக்கிய யாழ். மாவட்டச் செயலகம், ஆளுனர் செயலகம்

கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு விரைவான நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தையும், வடமாகாண ஆளுனர் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு முக்கிய பதவி

பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மட்டப் பதவியை ஒன்றை உருவாக்குவதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஜெய்சங்கர் – பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உண்மை கண்டறியும் குழுவை யாழ்ப்பாணம் அனுப்புகிறது தேசிய காவல்துறை ஆணைக்குழு

அண்மையில் இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பாக உண்மை கண்டறியும் அதிகாரிகள் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை சிறிலங்காவுக்கு மீளக் கிடைப்பது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு செயற்பாடுகளிலேயே தங்கியிருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு சிறிலங்கா அதிபர் வழங்கியுள்ள உறுதிமொழி

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.