மேலும்

மாதம்: April 2016

பாலம் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேசவில்லை – சிறிலங்கா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுக்களும் நடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பரவிப்பாஞ்சான் விவகாரம்: சிறிலங்கா இராணுவம் மீதே விசாரணை நடத்த வேண்டும் – சுமந்திரன்

பரவிப்பாஞ்சான் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதானால், பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் மீதே விசாரணை நடத்த வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்த வைகோ

சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்று தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ‘எனக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்ட திமுக சதி’ என்ற காரணத்தைச் சொல்லி தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிய வைகோ, எளிதில் உணர்ச்சி வசப்படும் குணத்தால் இதற்கு முன்பும் பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

முன்னறிவிப்பின் பின்னரே முகாமுக்குள் நுழைந்தார் சம்பந்தன் – சிறிலங்கா இராணுவம்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள், முன்னறிவிப்புச் செய்து விட்டே சென்றார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கட்டுநாயக்கவில் கைது

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சமூகவலைத்தளத்தில் அச்சுறுத்தல் விடுத்தவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யபப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் சம்பந்தன் சந்திப்பு – காணிகள் விடுவிப்பு, கைதுகள் குறித்து பேச்சு

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் திடீரென அதிகரித்துள்ள கைதுகள் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன் கைது

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளரான சிவகரன், நேற்று மன்னாரில் வைத்து, தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கைது செய்யப்பட்டார்.

மத்தல விமான நிலையத்தைக் கைப்பற்றும் போட்டியில் மூன்று சீன நிறுவனங்கள்

அம்பாந்தோட்டை- மத்தல அனைத்துலக விமான நிலையத்தைக் கைப்பற்றும், போட்டியில் மூன்று சீன நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன.

பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் உடன் விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சிறிலங்கா இராணுவத்தினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாளை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.