அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் – மறுப்பதற்கு அவசரப்படாத சிறிலங்கா இராணுவம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கையில், கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.