மைத்திரியை இரகசியமாக சந்தித்தார் மகிந்த?
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா, நேற்றுமதியம் திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படையின் டொக்யார்ட் தளத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
மாலைதீவு தொடக்கம் மலாக்கா நீரிணை வரையான ஆழ்கடலில் சிறிலங்கா கடற்படை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
விடுதலைப் புலிகளால் குளங்களிலும், கடலேரிகளிலும், விட்டுச் செல்லப்பட்டுள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கே, அமெரிக்காவிடம் சி்றிலங்கா கடற்படையினர் பசுபிக் தீவில் பயிற்சி பெற்று வருவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக மிகக் கவனமாக ஆராயப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளார். நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த, இந்தியக் கடற்படையின் சுஜாதா, திர் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் வருண ஆகிய கப்பல்களின் அணியுடனேயே இவர் சிறிலங்கா வந்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.
தனது கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவுக்கு அப்பாலுள்ள கண்டமேடைக்கு உரிமை கோரும் சிறிலங்காவின் செயலுக்கு பங்களாதேஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக ருமேனியாவுக்குள் நுழைந்த சிறிலங்காவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சேர்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று பிற்பகல் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.