மேலும்

நாளை மறுநாள் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ki-pi-ninaiventhalஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் சனிக்கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது.

நாளை மறுநாள் (26.03.2016) சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8 மணிக்கு நிறைவடையும் வகையில், இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Paroisse St Bernard de Chapelle, Rue Pirre l’ermite, 75018 Paris  என்ற முகவரியில், இந்த நிகழ்வு இடம்பெறும். இந்த நிகழ்வில், அகவணக்கம், ஞாபக மலர் வெளியீடு, நினைவுரைகள் மற்றும் பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

ki-pi-ninaiventhal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *