மேலும்

‘நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’–நூல் வெளியீடு

norway-veer vidda vizhuthukalநோர்வேயில் ஈழத்தமிழர் புலம்பெயர் வாழ்வியலின் 60 ஆண்டுகள் நிறைவில் ’நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’எனும் தலைப்பிலமைந்த நூல்-,தமிழாசிரியர், கவிஞர், சமூக ஆர்வலராக நோர்வேத் தமிழர்களுக்கு அறியப்பட்ட உமாபாலன் சின்னத்துரை அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.

இதன் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை  (12-03-16) லோறன்ஸ்கூ Kjenn பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மண்டபம் நிறைந்த மக்களின் பங்கேற்புடன் மிகச்சிறப்பானமுறையில் நூல் அறிமுக–வெளியீட்டுவிழா இடம்பெற்றது.

வரலாற்றினைப் பதிவுசெய்தல், ஆவணப்படுத்துதல் சார்ந்து ஈழத்தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் போதிய பிரக்ஞையின்மை நிலவிவருகின்ற புறநிலையில்  உமாபாலனின் தன்னார்வ முயற்சியில் இத்தகையதொரு தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றமை முக்கியத்துவம்மிக்க ஆரம்பமாகக் கருதப்படுகின்றது.

வாழ்வியலைப் பதிவுசெய்தல் – ஆவணப்படுத்தல் சார்ந்த எதிர்காலமுயற்சிகளுக்கானமுன்னுதாரணமாகவும், தூண்டுதலாகவும் இது கொள்ளத்தக்கது.

தமிழ் – நோர்வேஜிய, என இருமொழியில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது.

norway-veer vidda vizhuthukal (1)norway-veer vidda vizhuthukal (2)norway-veer vidda vizhuthukal (3)

norway-veer vidda vizhuthukal (4)

norway-veer vidda vizhuthukal (5)norway-veer vidda vizhuthukal (6)norway-veer vidda vizhuthukal (7)norway-veer vidda vizhuthukal (8)

ஒளிப்படங்கள்: நரேன் யோகராஜா

ஒளிப்படங்கள்: நரேன் யோகராஜா

புலம்பெயர் வாழ்வியல் சூழலில் இந்தவடிவத்திலான நூல் உருவாக்க முயற்சி தமிழுக்குப் புதியது. எனவே நோர்வேயில் வாழ்கின்ற ஏனைய வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட சமூகங்கள் மற்றும் ஏனைய உலகநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் இதையொத்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இந்நூலின் வரவு உந்துதலாக அமையுமென்ற கருத்தும் நிலவுகின்றது.

தமிழர் வரலாறும் பண்பாடும்,நோர்வேயிலுள்ள பல்துறைசார்ந்த தமிழ் முன்னோடிகள், தமிழ் சார்ந்தமுயற்சிகள், சமூகநலன்பேண் அமைப்புகள் பற்றிய தகவல்கள், தரவுகள் நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்நூல் வெளியீட்டு விழாவில் நோர்வேயிய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டு இம்முயற்சிக்கான வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர்.

லண்டனிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர் தயானந்தா இளையதம்பி சிறப்புரை ஆற்றியிருந்தார்.

ஒஸ்லோ பல்கலைக்கழக சமூகமானிடவியல் பேராசிரியர் Øivind Fuglerud நூல் பற்றிய விமர்சன உரையினை ஆற்றியிருந்தார்.

புலம்பெயர் வாழ்வியலில் ஆரம்பகாலங்களில் பெருஞ்சமூகத்தின் மத்தியில் தமிழர்கள் எதிர்கொண்ட சவால்கள் – ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவிய சவால்களுக்கு முகம்கொடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு வழிகாட்டி நெறிப்படுத்திய சமூகச் செயற்பாட்டாளர்களின் பங்கு – திருப்புமுனையான நிகழ்வுகள் -தாயகத்தின் அரசியல், சமூக பொருளாதார விவகாரங்களில் நோர்வேத் தமிழர்களின் வகிபாகம் போன்ற வரலாற்றின் போக்கினைத் தீர்மானித்த நிலைமைகள் இதில் பதிவாக்கப்படாதமைசார்ந்த காத்திரமான விமர்சனம் ஒஸ்லோபல்கலைக் கழகசமூகமானிடவியல் பேராசிரியர் Øivind Fuglerud அவர்களின் உரையில் முன்வைக்கப்பட்டமை கவனத்தை ஈர்த்தது.

பேராசிரியர் Øivind Fuglerud 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தேசியப் பிரச்சினை, புலம்பெயர் வாழ்வியல் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெரும் முயற்சியினைத் தனிமனிதனாக முன்னெடுப்பதில் இருக்கக்கூடிய சவால்களும் சிக்கல்களும் புரிந்து கொள்ளக்கூடியது. இதற்குப் பின்னால் உள்ளஉழைப்பு சாதாரணமானதல்ல. பலமுனைகளிலிருந்து தகவல்களைத் திரட்டித் தொகுத்து நூலாக்கிய இம்முயற்சிக்குப் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

காத்திரமான விமர்சனங்கள் உள்வாங்கப்பட்டு, இந்நூலினை முழுமைப்படுத்தும் முயற்சி இதன் அடுத்த பதிப்பில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையும் விழாவில் வெளிப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

ஒளிப்படங்கள்: நரேன் யோகராஜா

ஒரு கருத்து “‘நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’–நூல் வெளியீடு”

  1. arni narendran says:

    It is an exemplary Effort and Event to chronicle the life and times of Tamils in Norway for the last six decades. Kudos to Thiru Sinnathurai Umabalan avargal for this monumental work, the fact that the historic publication has been released both in Tamil and Nodic language is an attempt to build bridges and assimilate the Tamil community in Norway. The participation in the function by Prof Fuglerud adds special significance to the Book launch event.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *