சம்பூர் கடற்படைத்தளம் விரைவில் இடம்மாற்றம் – நாடாளுமன்றில் அறிவிப்பு
திருகோணமலை, சம்பூரில் உள்ள விதுர கடற்படைத் தளம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்று, நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார்.
திருகோணமலை, சம்பூரில் உள்ள விதுர கடற்படைத் தளம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்று, நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார்.
கடந்த கால துன்பங்களும் அவலங்களும் மீண்டும் நிகழ இடமளிக்கப்படக் கூடாது. அதற்கு, கடந்த காலங்களில் இடம் பெற்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அனைத்துலக பங்களிப்புக்கு தமது அரசாங்கம் தயங்கவில்லை என்றும், ஆனாலும், இறுதி தீர்ப்பு உள்நாட்டு நீதிமுறைமைகளுக்கு ஏற்பவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் சிறிலங்காவிற்கான எனது பயணத்தின் போது நான் பெருமளவான இராணுவ வீரர்களின் பிரசன்னத்தை அவதானித்தேன். இது உண்மையில் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவர்கள் வாகனங்களில் அடிக்கடி செல்வதையும் நான் பார்த்தேன்.
புலனாய்வு இதழியலை ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்பவும், சிறிலங்காவில் உள்ள ஊடக அமைப்புகளுக்கு, அமெரிக்கா ஐந்து இலட்சம் டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட, அடிமடி வலைகளைப் பயன்படுத்தி இழுவைப் படகு மூலம் மீன்பிடித்தலைத் தடைசெய்யும், சட்டமூலத்தை, மாகாணசபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட அனைவரையும் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுததுடன், மகிந்த ராஜபக்சவினது கண்களும் கலங்கிப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லிணக்கப் பொறிமுறைகளை வடிவமைப்பதற்கான பொது கலந்துரையாடல் செயல்முறைகளை முன்னெடுப்பதற்கான இணையத்தளம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.