மேலும்

மாதம்: February 2016

மகிந்தவை அச்சம்கொள்ள வைத்திருக்கும் பொன்சேகாவின் மறுபிரவேசம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அலரி மாளிகையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட போது, கோத்தபாய ராஜபக்ச பௌத்த மகாசங்கத்துடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

அனைவரையும் முட்டாள்கள் போல கருத்து வெளியிட்டிருக்கிறார் கோத்தா – சுமந்திரன்

அனைவரையும் முட்டாள்கள் போலக் கருதி, காணாமற்போனோர் தொடர்பாக ன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்றார் ரெஜினோல்ட் குரே

வடக்கு மாகாண ஆளுனராக, ரெஜினோல்ட் குரே இன்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று மதியம் அவர் பதவியைப் பொறுப்பேற்றார்.

சரத் பொன்சேகாவுக்கு அமைப்பாளர் பதவி – ஐதேகவுக்குள் வலுக்கும் எதிர்ப்பு

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மகிந்தவை மின்சார நாற்காலியில் இருந்து பாதுகாத்தேன் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

மகிந்த ராஜபக்சவை மிக்சார நாற்காலியில் இருந்து தாமே பாதுகாத்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பிரபாகரனே வடக்கிலுள்ள மக்களின் கதாநாயகன் – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தம்

லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக, சிறிலங்கா கடற்படையின் விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சோதனைக்குச் செல்லும் சிறிலங்கா இராணுவம் – தகவல் திரட்ட புதிய உத்தி

சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் சிறிலங்காவின் முப்படைகளும் இணைக்கப்பட்டுள்ளமை, சிறிலங்கா இன்னமும் இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

வெலிக்கடையின் ‘எஸ்’ விடுதி புனரமைப்பு – முக்கிய பிரமுகர் கைதுக்கு முன்னேற்பாடு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயகுமாரணதுங்க போன்ற முக்கிய பிரமுகர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையின் ‘எஸ்’ விடுதி, புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படையினரைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவோம் – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்கா படையினரை பாதுகாப்பதாக  சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அளித்துள்ள வாக்குறுதி காப்பாற்றப்படும் என்றும்  தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன.