மேலும்

மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நினைவேந்தல் நிகழ்வு

KAG-memorial (1)காலமெல்லாம் கொட்டிக்கொட்டிப் பறை முழக்கிப் பாட்டிசைத்த மண்ணின் கலைஞர் – புதுவைப் பல்கலைக் கழக நிகழ்கலைத்துறை புல முதன்மையர், பேராசிரியர், கே.ஏ. குணசேகரன் நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஞாயிறற்றுக் கிழமை காலை ,புதுவைப் பல்கலைக் கழக கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்றது.

ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் த.மார்க்ஸ், எழுத்தாளர் அன்புசெல்வம், கே.ஏ.குணசேகரன்  குடும்பத்தினர் ஒழுங்கமைப்புச் செய்த நிகழ்வின் தொடக்கத்தில், கே.ஏ.குணசேகரனின் மண்ணின் பாடல்கள் இசைக்கப்பட்டன.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கே.ஏ.குணசேகரன் அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

KAG-memorial (1)KAG-memorial (2)KAG-memorial (3)KAG-memorial (4)KAG-memorial (5)

எழுத்தாளர் அன்புசெல்வம், ஆங்கிலத்துறைப் பேராசிரியர் நா.நடராஜன், கவிஞர் சுகிர்தராணி, கவிஞர் உமாதேவி, பேராசிரியர் திருநாகலிங்கம், பேராசிரியர் அறிவுநம்பி, நாடகத்துறைப் பேராசிரியர் ஆறுமுகம்,ஆய்வு மாணவர் பட்டாபி, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆம்ஸ்ட்ராங்க், எஸ்.கே.சிவா, புல முதன்மையர் முனைவர் வீ. வாலசமுத்திரம், எழுத்தாளர் இராசேந்திர சோழன் , காந்தி கிராமியப் பல்கலைப் பேராசிரியர் முத்தையா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

கே.ஏ. குணசேகரனின் மகள் மருத்துவர் குணவதி, மருத்துவர் அகமன் ஆகியோர் அவரது பாடல்களை இசைத்தனர். கே.ஏ. குணசேகரனின் துணைவியார் முனைவர். வீ.ரேவதி ஏற்புரை நிகழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *