மேலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 23 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வி

upfa-logoசிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.பி.திசநாயக்க, மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, ஹேமல் குணசேகர, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்தானந்த அளுத்கமகே, குருநாகலவில் போட்டியிட்ட ரி.பி.ஏக்கநாயக்க மற்றும் திஸ்ஸ கரலியத்த, ரோஹண புஸ்பகுமார ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட உதித்த லொக்கு பண்டார, புஷ்பகுமார, சாமிக புத்ததாச, லக்ஸ்மன் செனவிரத்ன ஆகியோரும் மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஜகத் புஸ்பகுமார, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

lost-upfa-candidates

அதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட நிருபமா ராஜபக்ச, களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த சமரசிங்க, காலியில் போட்டியிட்ட பியசேன கமகே, கம்பகாவில் போட்டியிட்ட உபேக்சா சுவர்ணமாலி, பண்டு பண்டாரநாயக்க, பீலிக்ஸ் பேரேரா, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, ருவன் ரணதுங்க, துலிப் விஜேசேகர, சரத் குமார குணரத்ன போன்றோரும் தோல்வி கண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *