மேலும்

தொங்கு நாடாளுமன்றம் அமையும் – சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் கணிப்பு

Srilanka-Electionவரும் நாடாளுமன்றத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐதேகவுக்கும் இடையில் கடும் போட்டியாக அமையும் என்றும், எனினும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அளித்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்கா அரச புலனாய்வுப் பிரிவு கையளித்துள்ள இந்த அறிக்கையில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெறக்கூடிய ஆசனங்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக, சிங்கள வாரஇதழான சத்ஹன்ட செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மாவட்ட மட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் நெருக்கமான கடும் போட்டி நிலவும் அதேவேளை, தொகுதி ரீதியாக ஐதேக முன்னணியில் இருக்கிறது.

வடக்கு கிழக்கு பகுதிகள் மற்றும் கேகாலை மற்றும் மொத்தளை மாவட்டங்களின் முடிவுகள் தெளிவற்ற நிலையில் இருப்பினும், ஐதேக இந்த தேர்தலில் 90 ஆசனங்களுடன், மேலதிகமாக 12 தொடக்கம் 14 வரையான தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெறும்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 81 ஆசனங்களைப் பெறுவதுடன், 10 தொடக்கம் 12 வரையான தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெறும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களுடன்,  02 தொடக்கம் 03 தேசியப்பட்டியல் ஆசனங்களையும் பெறும்.

ஜேவிபி,  12 ஆசனங்களுடன்,  02 தொடக்கம் 03 வரையான தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெறும்.

ஐதேகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தலா 9 மாவட்டங்களைக் கைப்பற்றும்  அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 04 மாவட்டங்களை வசப்படுத்தும்.

இதன் காரணமாக, அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்குத் தேவையான 113 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெறாது என்றும், தொங்கு நாடாளுமன்றமே அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையின்படி,   மாவட்ட ரீதியாக கட்சிகள் பெறக் கூடிய ஆசனங்கள் –

  1. கொழும்பு  –  ஐதேக – 10, ஐ.ம.சுமு – 07, ஜேவிபி – 02
  2. கம்பகா     –  ஐதேக – 09, ஐ.ம.சுமு – 07, ஜேவிபி – 02
  3. களுத்துறை  – ஐதேக – 04, ஐ.ம.சுமு – 05, ஜேவிபி – 01
  4. கண்டி     –  ஐதேக – 07, ஐ.ம.சுமு – 04, ஜேவிபி – 01
  5. நுவரெலிய  – ஐதேக – 06, ஐ.ம.சுமு – 02
  6. மாத்தளை  – ஐதேக – 03, ஐ.ம.சுமு – 02
  7. காலி     –  ஐதேக – 04, ஐ.ம.சுமு – 05, ஜேவிபி – 01
  8. மாத்தறை  –  ஐதேக – 03, ஐ.ம.சுமு – 04, ஜேவிபி – 01
  9. அம்பாந்தோட்டை – ஐதேக – 02, ஐ.ம.சுமு – 04, ஜேவிபி – 01
  10. குருநாகல  – ஐதேக – 06, ஐ.ம.சுமு – 08, ஜேவிபி – 01
  11. புத்தளம்  –  ஐதேக – 05, ஐ.ம.சுமு – 03
  12. அனுராதபுர  –  ஐதேக – 03, ஐ.ம.சுமு – 05 , ஜேவிபி – 01
  13. பொலன்னறுவ  – ஐதேக – 02, ஐ.ம.சுமு – 03
  14. பதுளை  – ஐதேக – 05, ஐ.ம.சுமு – 03
  15. மொனராகல – ஐதேக – 02, ஐ.ம.சுமு – 03
  16. இரத்தினபுரி  – ஐதேக – 04, ஐ.ம.சுமு – 06, ஜேவிபி – 01
  17. கேகாலை –  ஐதேக – 05, ஐ.ம.சுமு – 04
  18. அம்பாறை   – ஐதேக – 05, ஐ.ம.சுமு – 02
  19. மட்டக்களப்பு – ஐதேக – 01, த.தே.கூ – 04
  20. திருகோணமலை – ஐதேக – 01, ஐ.ம.சுமு – 01, த.தே.கூ – 02
  21. யாழ்ப்பாணம்   – ஐதேக – 02, ஐ.ம.சுமு – 01, த.தே.கூ – 04
  22. வன்னி     –  ஐதேக – 01, ஐ.ம.சுமு – 01, த.தே.கூ – 04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *