அழுத்தங்கள் கொடுத்தாலும் செப்ரெம்பரில் அறிக்கை வெளியாகும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு மீண்டும் புதிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் கூட, விசாரணை அறிக்கையை வரும் செப்ரெம்பர் மாதம், தான் வெளியிடுவேன் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.