மேலும்

நாள்: 28th March 2015

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்

இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான விகாஸ் ஸ்வரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படாது

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாது என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை – இராஜதந்திர வெற்றி என்கிறது சிறிலங்கா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் நீடித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சீன-அமெரிக்க-இந்திய உறவுகளின் பண்புகள் – ஓர் ஒப்பீடு- II

சீனாவை சர்வதேச விவகாரங்களில் தலையிட வைக்கும் அல்லது ஈடுபாட்டை உருவாக்கத் தூண்டும் மேலைத்தேய தந்திரோபாயத்தில், சிறீலங்காவின் சிறுபான்மை இனமாக காட்டப்படும் தமிழினமும் சிக்குப்பட வாய்ப்புகள் பல உள்ளன. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.

கோடரியால் வெட்டப்பட்ட மைத்திரியின் சகோதரர் மரணம்

பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று அதிகாலை உயிரிழந்தார்.

திருக்கோணமலைத் துறைமுகத்தில் 4 இந்தியக் கடற்படைக் கப்பல்கள்

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு பயிற்சிக்காக வந்துள்ளன.

மேற்குலக, இந்திய உறவுகளுக்காக சீனாவை இழக்க முடியாது – சிறிலங்கா

சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், மேற்குலக சக்திகள் மற்றும், இந்தியாவுடனான உறவுகளில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சீனாவை சிறிலங்கா இழக்காது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களை பிரிவினைவாதிகளாக அறிமுகப்படுத்தும் மகிந்த ராஜபக்ச

தன்னைத் தோற்கடித்த வடக்கு, கிழக்கு மக்களைப் பிரிவினைவாதிகள் என்று அறிமுகப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடும் வகையில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச  பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

உக்ரேன் ஆயுத விற்பனை விசாரணையில் மகிந்தவும் சிக்கலாம்

உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் விசாரணைகளில் சிக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.