மேலும்

நாள்: 21st March 2015

பீல்ட் மார்ஷல் பதவிநிலை சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்தைச் சூனியமாக்குமா?

பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, அரசியலில் தொடர்ந்து ஈடுபடும் வாய்ப்பை இழப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ராஜபக்ச பதுக்கியுள்ள 2 பில்லியன் டொலரை கண்டுபிடிக்க இந்தியாவும், அமெரிக்காவும் உதவி

டுபாயில் உள்ள வங்கியில் ராஜபக்ச குடும்பத்தினரால் வைப்பிலிடப்பட்டுள்ள 2 பில்லியன் டொலர் பணம் தொடர்பான விசாரணைக்கு, இந்தியாவும் அமெரிக்காவும் உதவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடியின் சிறிலங்கா பயணம் – சீன ஆய்வாளரின் பார்வை

ஒவ்வொரு சிறிய நாடுகளும் பல்வேறு சக்திகள் மத்தியில் அதிகார சமநிலையைப் பேணுவதற்காகப் போராடுகின்றன. மேலாதிக்க சக்திகளின் மத்தியில் நிலவும் போட்டித்தன்மையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சில சிறிய நாடுகள் தமது தேசிய நலன்களை இயன்றளவு அடைந்து கொள்ள முயற்சிக்கின்றன.

சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷலாக பதவிஉயர்த்தும் நிகழ்வை மேற்கு நாடுகள் புறக்கணிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி  ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு அளிக்கும் விழா நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வை மேற்கு நாடுகளின் தூதுவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலாய்லாமாவை அழைக்கும் பிக்குகளின் முயற்சி – சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைக்கும் பௌத்த பிக்குகளின் முயற்சி குறித்து, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சீன இராணுவத் தளம் இல்லை – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்கா, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

மோடியின் பாதுகாப்பு ஊடறுக்கப்படவில்லையாம் – இளவாலைச் சம்பவத்தை நிராகரிக்கிறது இந்தியா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அவரது பாதுகாப்பு ஊடறுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

சீனாவுக்கு மென்போக்கை காட்டும் சிறிலங்கா

இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக கட்டுமானப் பணியின் ஒரு பகுதியை மீள ஆரம்பிப்பதற்கு, சீன நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமாக நேற்று அனுமதி அளித்துள்ளது.