மேலும்

நாள்: 26th March 2015

சிறிலங்கா அதிபரின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு படுகாயம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான, பிரியந்த சிறிசேன இன்று மாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், பொலன்னறுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரியின் தடையை மீறி இரத்தினபுரிக் கூட்டத்தில் குவிந்த சுதந்திரக் கட்சியினர்

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வலி்யுறுத்தி, இரத்தினபுரியில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி விதித்திருந்த தடையை மீறி, அந்தக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் சுமந்திரன் சந்திப்பு – புலம்பெயர் தமிழர்களும் பங்கேற்பு

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவின் பிந்திய நிலவரங்கள் குறித்தே இந்தப் பேச்சுக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீன அதிபரிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

தமது அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மீள ஆரம்பிக்கப்படும் என்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம்,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா- சீன உறவை, மீண்டும் மேலுயர்த்த வேண்டும் – சீன அதிபர் வலியுறுத்தல்

முக்கியமான நோக்கத்தை நிறைவேற்ற சிறிலங்கா- சீன உறவை, மீண்டும், ஊக்குவித்து மேலுயர்த்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீன அதிபர் ஜி ஜின்பின் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் பதவிநிலை அரசியலுக்குத் தடையாக இருக்காது – என்கிறார் சரத் பொன்சேகா

தாம் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடப் போவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் பதவிநிலை அரசியலில் ஈடுபடுவதற்குத் தடையாக இருக்காது என்றும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சம்பூர் சிறிலங்கா கடற்படை பயிற்சி மையம் இடம்மாறுகிறது – 237 ஏக்கர் காணி உரியவரிடம் ஒப்படைப்பு

திருகோணமலை சம்பூரில், பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் பயிற்சி மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

கிழக்கு கரையோர தொடருந்துப் பாதை திட்டம் – இந்தியா தீவிர பரிசீலனை

கிழக்கில் கரையோர தொடருந்துப் பாதையை அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இந்தியா அக்கறையுடன் பரிசீலிக்கும் என்று, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மருமகனுக்கு எதிராக அனைத்துலக விசாரணை

உக்ரேனில் உள்ள பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஸ்யாவுக்கான சிறிலங்காவின்  முன்னாள் தூதுவர், உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளது.

பீஜிங் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர் – சீனத் தலைவர்களுடன் முக்கிய பேச்சு

சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு பீஜிங் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  இன்று சீனத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.