மேலும்

நாள்: 3rd March 2015

சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் – இம்மாதம் வழங்கப்படுகிறது

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு அரசியலில் திடீர் திருப்பம் – கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பெற்றது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இணைந்து கொண்டதையடுத்து, கிழக்கு மாகாண அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபருடன் 5 நிமிடங்கள் – பாகிஸ்தான் ஊடகவியலாளர்

எனது நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சி போன்றே உங்களுடைய நாட்டிலும் கிளர்ச்சி இடம்பெறுகிறது. இதற்குப் பின்னால் இந்தியாவின் றோ அமைப்பு செயற்படுகிறது என ராஜபக்ச குறிப்பிட்டார்.

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவு

சிறிலங்காவில் தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.

செப்ரெம்பருக்குப் பின்னரும் அறிக்கையைத் தாமதிக்கக் கூடாது – பிரித்தானியா வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

அதிகாரப்பகிர்வு குறித்து மோடியுடன் பேசுவோம் – சுமந்திரன்

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டது திருகோணமலை – சிவில் அரச அதிபர் நியமனம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டுகால இராணுவ ஆட்சியில் இருந்து திருகோணமலை மாவட்டம் விடுபட்டு, நேற்று முதல் சிவில் நிர்வாகம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கையை உள்ளக விசாரணைக்கு பயன்படுத்துவோம் – ஜெனிவாவில் மங்கள

போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.