மேலும்

நாள்: 13th March 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் சவால்களை முறியடிக்குமா இந்தியா?

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கினால் அது இந்தியாவின் அதிகார சக்தியாக மிளிரவேண்டும் என்கின்ற இலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையே குறித்து நிற்கும். இதன்பின்னர், இந்தியா இப்பிராந்தியத்தின் அதிகாரத்துவ சக்தியாக விளங்குவது கடினமானதாகும்.

13ஆவது திருத்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் – கொழும்பில் மோடி

சிறிலங்காவில் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தியுள்ளார்.

மோடி – மைத்திரி பேச்சுக்களின் முடிவில் 4 உடன்பாடுகள் கையெழுத்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களின் முடிவில் நான்கு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா நடுவராக வேண்டும் – மோடியிடம் வலியுறுத்துமாம் கூட்டமைப்பு

சிறிலங்காவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது தரப்பு நடுநிலையாளராக இந்தியாவின் தலையீடு அவசியம், என்று உணர்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

‘உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது’ – ராஜீவைத் தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாய்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.

கண்ணீரோடு கலங்கி நிற்கிறோம் அரவிந்தன் அண்ணா…..! – நினைவுப் பகிர்வுகள்

புதினப்பலகையின்  ஆசிரியரும், புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியுமான மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் பிரிவுத்துயரை, வெளிப்படுத்தும் புதினப்பலகை குழுமத்தினரின் நினைவுப் பகிர்வுகள்…..