மேலும்

நாள்: 10th March 2015

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கடல் விழுங்குகிறது

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரண்டு வாரங்கள் தொடர்ந்து இடைநிறுத்தினால், ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட பணிகளை கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும் என்று சீன கட்டுமான  நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு ஊக்கமளிப்போம்- இந்திய வெளிவிவகாரச் செயலர்

சிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஊக்கமளிக்கும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனங்களுக்கு இனி முன்னுரிமைச் சலுகைகள் கிடையாது – சிறிலங்கா நிதியமைச்சர்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் சிறிலங்காவில் வழங்கப்படாது என்று, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

வெள்ளியன்று கி.பி. அரவிந்தன் அவர்களின் இறுதி நிகழ்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மறைந்த ‘புதினப்பலகை’ ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியுமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளன.

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 362 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டங்கள்

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நேற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் போர்க்குற்ற ஆவணப்படம் – மைத்திரிக்கு நெருக்கடி

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது.