மேலும்

நாள்: 17th March 2015

சிறிலங்கா தொழிற்கட்சியின் மூலம் பிரதமர் பதவிக்குப் போட்டியிட மகிந்த முடிவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்காக, சிறிலங்கா தொழிற்கட்சி மூலம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

திருகோணமலையில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ‘நினைவுகளில் கி.பி.அரவிந்தன்’ என்னும் தலைப்பில்,’நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சீன முதலீட்டாளர் நலன்களை சிறிலங்கா பாதுகாக்க வேண்டும்- வலியுறுத்துகிறது சீனா

சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்குமாறும், சிறிலங்காவிடம், சீனா இன்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

றோவும் ராஜபக்சவும் – ஒரு முன்னாள் இந்திய ஊடகவியலாளரின் பார்வை

ராஜபக்ச தொடர்பில் இந்தியா விழிப்புணர்வுடன் இருப்பதே விவேகமானது. பங்களாதேசில் ஷேக் ஹசினாவிடம், பேகம் கலீடா சியா தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் சியாவை இந்தியா கருத்திலெடுக்கவில்லை. இதே தவறை மீண்டும் சிறிலங்கா விடயத்தில் இந்தியா மேற்கொள்ளக்கூடாது.

சீனாவுக்கு உரிமையாகப் போகும் சிறிலங்கா வான்பரப்பு – சிக்காகோ பிரகடனத்தால் சிக்கல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டால், சிறிலங்கா தனது வான் பிராந்தியத்தின் ஒரு பகுதியை சீனாவிடம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

13வது திருத்தம் குறித்த மோடியின் கோரிக்கை – சிறிலங்கா அரசியல் மட்டத்தில் குழப்பமான கருத்துகள்

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிர்ந்து தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும்,விடுத்த வேண்டுகோள் குறித்து, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

275 அரசியல் கைதிகளின் விபரங்களை கையளித்தது சிறிலங்கா காவல்துறை

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, ஆவணங்களின் படி, சிறிலங்காவில் 275 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கோத்தா ஆரம்பித்த பாதுகாப்புத் தலைமையக வளாக கட்டுமானப் பணியும் இடையில் நின்றது

பத்தரமுல்லையில் முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட, புதிய பாதுகாப்புத் தலைமையக வளாக கட்டட நிர்மாணப் பணிகள், நிறுத்தப்பட்டுள்ளன. கட்டட நிர்மாணத்துக்கான நிதி இல்லாமையாலேயே இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.