மேலும்

நாள்: 12th March 2015

நாளை கொழும்பு வரும் மோடிக்கு 2 விமானந்தாங்கிக் கப்பல்கள், 7 போர்க்கப்பல்கள் பாதுகாப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக தனது இரண்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் மற்றும், 7 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளது.

அமைச்சர் அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரையில் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கி.பி.அரவிந்தன் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில், வரும் 14ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணியளவில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

இந்தியாவையும் விக்னேஸ்வரனையும் எதற்காகத் தாக்குகிறார் ரணில்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என ரணில் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை.

13வது திருத்தம் இறுதித் தீர்வல்ல என்பதை மோடியிடம் வலியுறுத்துவோம் – விக்னேஸ்வரன்

13வது திருத்தச்சட்டத்துக்குப் பதிலீடாக, கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணையில் ஐ.நா தேவையில்லை – பிபிசி செவ்வியில் மைத்திரி

ஐ.நா அதிகாரிகளின் தலையீடு இல்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அடுத்த மாதத்துக்குள் நிறுவப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனாவை குற்றவாளி போல நடத்துகிறது புதிய அரசாங்கம்- மகிந்த விசனம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், சீனாவை குற்றவாளி போல நடத்துவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

நாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு விசாரணை ஆவணங்கள் ஜூலையில் வெளியிடப்படும் – பிரித்தானியாவிடம் வாக்குறுதி

ஐ.நா விசாரணையாளர்கள் வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, சிறிலங்காவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஆவணத்தொகுதி வெளியிடப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.