மேலும்

நாள்: 11th March 2015

சீனத் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் மோடி – இந்திய பாதுகாப்பு நிபுணர்

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து, சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர் குவாமர் அகா தெரிவித்துள்ளார்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் இன்று இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படுகிறது

கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த புதினப்பலகை ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான, கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் உடல் இன்றும் நாளையும் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது.

இந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்

இந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மோடியின் கையசைப்புக்காக காத்திருக்கும் தலைமன்னார் தொடருந்து நிலையம்

சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னாருக்கான தொடருந்து சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டு பொறிமுறை அனைத்துலக தரம் வாய்ந்தாக இருக்க வேண்டும் – ஐ.நா அதிகாரி

தேர்தலை அடுத்து,  நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கத்தக்க அனைத்துலக விதிமுறைகள், மற்றும் தரம்வாய்ந்த நம்பகமான, பொறுப்புக்கூறும் உள்நாட்டுச் செயல்முறை ஒன்றை உருவாக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.

வாக்குறுதிகள் செயலுருப் பெறவேண்டும் – மைத்திரியிடம் வலியுறுத்தினார் டேவிட் கெமரொன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிகள் அனைத்தும் செயலுருப் பெறுவதையே பிரித்தானியா விரும்புவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரொன் தெரிவித்துள்ளார்.

மகிந்த நடத்தியது சர்வாதிகார ஆட்சி – அமெரிக்க உயரதிகாரியின் கருத்து

சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீளமைப்பதற்கும், இனப்பதற்றத்தின் காயங்களை ஆற்றுவதற்கும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.