மேலும்

மாதம்: March 2015

விடுதலைப் புலிகளின் கோட்டைக்கு எதற்காகச் செல்கிறார் மோடி? – ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளது, தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என்று இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு விசாரணை செப்ரெம்பருக்குள் முடியாது – சிறிலங்கா அரசு கூறுகிறது

போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் நிறைவடையாது என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சீனாவின் 5 பில்லியன் டொலர் கடன்கள் குறித்து பேச பீஜிங் செல்கிறார் சிறிலங்கா நிதியமைச்சர்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பீஜிங் செல்லவுள்ளார்.

இந்திய – சிறிலங்கா நல்லுறவு – அமைதித் தீர்வுக்கு வழிகாட்டுமா?

இனப்பிரச்சினைக்கு அமைதியான தீர்வை எட்டுவதற்கு, முற்போக்கு புலம்பெயர் தமிழர்களையும், சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.

தமிழ் இளைஞர்கள் கடத்தல் குறித்து சிறிலங்கா கடற்படை முன்னாள் பேச்சாளரிடம் விசாரணை

கொழும்பிலும், திருகோணமலையிலும், தமிழ் இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்கவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சீன மீன்பிடிக் கப்பல்களுக்கான அனுமதியை மீளப்பெற்றது சிறிலங்கா

சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு எட்டு சீன நிறுவனங்களின் கப்பல்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகிறார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வரும் 6ம் நாள்- வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு, இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.