மேலும்

நாள்: 30th March 2015

பட்டதாரிகளுக்கு வடக்கு மாகாணசபை ஆசிரியர் நியமனம் – முதல்முறையாக கிடைத்த அதிகாரம்

வடக்கு மாகாணசபை முதல்முறையாக, சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளின்றி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கியுள்ளது.

போருக்குப் பின்னரும் பிளவுபட்டுக் கிடக்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை

தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்பேன்’ என கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பாளரான 50 வயதான கிறிஸ்ரி சாந்தினி தெரிவித்தார்.

சிறிலங்கா புலனாய்வு பிரிவினால் எந்நேரமும் கண்காணிக்கப்படும் முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள், எந்தவொரு அரச விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடாத போதிலும், தாம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட, கண்காணிக்குக்குள்ளாக்கப்படுவதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்களைத் தொடர சீன நிறுவனங்களுக்கு சிறிலங்கா அனுமதி

சீனாவுடன் இணைந்து வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீளவும் ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து திரும்பும் மைத்திரி – அடுத்து பாகிஸ்தான் பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாத முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ரஸ்யக் கடற்படைக் கப்பல்கள்

ரஸ்யக் கடற்படையின் பசுபிக் கப்பல் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய கப்பல்களே, கடந்த 28ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

ஒபாமாவினால் கௌரவிக்கப்படவுள்ள இலங்கைத் தமிழ் விஞ்ஞானி

விஞ்ஞான, கணித, மற்றும் பொறியியல் வழிகாட்டுதலுக்கான சாதனையாளர்களுக்கான அமெரிக்க அதிபர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, இலங்கைத் தமிழரான விஞ்ஞானி உள்ளிட்ட 14 பேர் அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் கெளரவிக்கப்படவுள்ளனர்.

சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி கிடைப்பதை தடுக்கச் சதி – முன்னாள் விமானப்படைத் தளபதி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இணையான, மார்ஷல் ஒவ் த எயார் பதவி, தனக்குக் கிடைப்பதை தடுப்பதற்கு சதி இடம்பெறுவதாக தாம் சந்தேகிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.