மேலும்

நாள்: 22nd March 2015

தென்னந்தோட்டத்தில் ஒளிந்திருந்த மைத்திரி – மகிந்தவிடம் இருந்து தப்பியது எப்படி?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் குடும்பத்துடன் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில், தொடங்கஸ்லந்தை பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில், தேர்தல் நாளன்று இரவு முழுவதும், ஒளிந்திருந்துள்ளார்.

அழுத்தங்கள் கொடுத்தாலும் செப்ரெம்பரில் அறிக்கை வெளியாகும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு மீண்டும் புதிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் கூட, விசாரணை அறிக்கையை வரும் செப்ரெம்பர் மாதம், தான் வெளியிடுவேன் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் பீல்ட் மார்ஷலாக உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பீல்ட் மார்ஷல் தரத்துக்குப் பதவிஉயர்த்தப்பட்டார்.

26 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

சிறிலங்காவில் மேலும் 26  அமைச்சர்கள் இன்று புதிதாகப் பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.

வடக்கு மாகாணசபையுடன் முரண்படத் தயாரில்லை – என்கிறார் மைத்திரி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனோ அல்லது வட மாகாணசபையுடனோ எவ்விதத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் சிறிலங்கா தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர்  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று உதயமாகிறது தேசிய அரசாங்கம் – 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரேன் பிரிவினைப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக சிறிலங்கா தூதுவர் மீது குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்சவின் உறவினரும், ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க, உக்ரேனிய பிரிவினைவாத போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளில் தற்காலிக பின்னடைவு – சீனா

கொழும்புத் துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தப்பட்டது, சிறிலங்கா- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு தற்காலிக பின்னடைவே என்று சீனா தெரிவித்துள்ளது.