மேலும்

நாள்: 29th March 2015

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக சிறிலங்காவுடன் கைகோர்க்கும் இந்தியா

சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புகளுடன் இந்தியப் புலனாய்வு அமைப்புகள், பேச்சுக்களை நடத்தவுள்ளன.

சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்

நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அணியில் இருந்தவர்கள் என்று, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

சம்பூரில் ஏப்ரல் இறுதிக்குள் 579 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் – ஒஸ்ரின் பெர்னான்டோ

திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில், இருந்து இடம்பெயர்ந்த 579 குடும்பங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியர்த்தப்படுவர் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன்

மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.

மீனவர்களின் விவகாரம்: வியாழனன்று சிறிலங்கா அதிபர் முக்கிய சந்திப்பு

இந்திய – சிறிலங்கா மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு,  இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக, வடக்கிலுள்ள மீனவர் சங்கங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர் ஆகியோருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்தவுள்ளார்.

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று சிறிலங்காவுக்கு வருகிறார்

சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மே 05ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு, ஜூன் 27இல் தேர்தல்?- ஆங்கில வாரஇதழ் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் மேமாதம் 05ம் நாள் கலைக்கப்பட்டு ஜூன் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.