மேலும்

நாள்: 20th March 2015

கோத்தாவுக்கும் பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு வழங்கக் கோருகிறது பொது பலசேனா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பொது பலசேனவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

மோடியின் யாழ். பயணம் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத் தலையீடு – சீன ஆய்வாளர் குற்றச்சாட்டு

தமிழர்கள் அதிகம் வாழும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று, சீனாவின் சிந்தனையாளர் குழாமின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ஏப்ரல் 23இல் சிறிலங்காவில் இருக்கமாட்டார் மைத்திரி

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவுறும் நாளான வரும் ஏப்ரல் 23ம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாட்டில் இருக்கமாட்டார் என்றும், அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இளவாலையில் மோடியின் பாதுகாப்பு வளையம் ஊடறுப்பு – இந்திய அரசு உயர்மட்ட விசாரணை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவருக்கான பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் ஒருவர் உள்நுழைந்த சம்பவம் தொடர்பாக, இந்திய அரசாங்கம் உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்களின் வேதனை

ஆல்பிரட்டின் தாய்க்கு, ‘என்றாவது ஒரு நாள் இலங்கைக்குத் திரும்புவோம்’ என்ற கனவு இருந்தது. ஆனால் தற்போது, “இலங்கைக்குத் திரும்பி வருவது என்ற முடிவின் மூலம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டேன் என்று பிள்ளைகள் என்னைக் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் ஆல்பிரட்டின் தாய்.

சரத் பொன்சேகா – தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷல்

ஜெனரல் சரத் பொன்சேகா தென்காசியப் பிராந்தியத்தில் பீல்ட் மார்ஷலாக, பதவி உயர்த்தப்படும் நான்காவது இராணுவத் தளபதியாக இருப்பார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த அரசில் இருந்த நால்வரின் பெயரில் டுபாய் வங்கியில் 2 பில்லியன் டொலர் பதுக்கல்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தவர்களால், 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான கறுப்புப் பணம், டுபாயில் உள்ள வங்கிக் கணக்குகளில் இரகசியமாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு அனுமதியோம் – சிங்கள அடிப்படைவாதிகள் போர்க்கொடி

சிறிலங்காவின் அரச தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசியகீதத்தை பாடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பௌத்தசிங்கள அடிப்படைவாதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்கா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்த ஆண்டு நடுப்பகுதியில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகப் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.