மேலும்

நாள்: 4th March 2015

சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு

சீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம்  விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.

மகிந்தவின் மகனிடம் இன்று விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

வவுனியாவில் முன்னாள் ரெலோ உறுப்பினர் சுட்டுக்கொலை

வவுனியா – மகாரம்பைக் குளத்தில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடிவேலழகன் என்ற 45 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

ஐ.நா உயர் பிரதிநிதி ரணிலுடன் சந்திப்பு – விசாரணையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்

சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இரவில் கண்மூடுகிறது மகிந்தவின் மாத்தல விமான நிலையம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மாத்தல அனைத்துலக விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படவுள்ளது.

தமிழர்களை திருப்திப்படுத்தும் போர்க்குற்ற விசாரணையே அவசியம் – ஐ.நா உயர் பிரதிநிதி

அனைத்துலகத் தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணையை சிறிலங்கா அரசாங்க துரிதமாக நடத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

‘இரகசியத் தடுப்பு முகாம்கள் இல்லை’ – மகிந்த பாணியில் கைவிரித்தார் ரணில்

சிறிலங்காவில் இரகசியத் தடுப்பு முகாம்கள் எவையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ருக்மலி சிறி தர்மலோக  விஜயலோக மகாவிகாரையில், பௌத்த பிக்குகளுடன் நடத்திய உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரான்சில் இருந்த சென்ற முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது – சட்டநடவடிக்கை எடுக்கப்படுமாம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, பிரான்சில் இருந்து சென்ற முருகேசு பகீரதி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.