மேலும்

நாள்: 15th March 2015

தாமரைக் கோபுர நிர்மாணமும் மீளாய்வு – சீனாவுக்கு அடுத்த சோதனை?

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும், தாமரைக் கோபுரம் நிர்மாணப் பணி குறித்தும் மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல்தீர்வை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் – மோடியிடம் கோரினார் விக்னேஸ்வரன்

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் கைப்பற்றினார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமரிடம் மன்னார் ஆயர் கையளித்த மனு

தலைமன்னார் இறங்குதுறைக்கு நேற்று வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையினால், மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பலாலியில் மோடிக்காக காத்திருந்த இராட்சதப் பறவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே, சிறிலங்காவில் அவரது பயணங்களுக்கு இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

“வடக்கு, கிழக்கை தவறாக கணித்து விட்டேன்” – ‘தி ஹிந்து’வுக்கு மகிந்த அளித்த செவ்வியின் முழுவடிவம்

“நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே வாக்களித்திருந்தனர். ஆனால் இத்தடவை 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இது எப்படி என்பது எனக்குத் தெரியாது.”

உதவியாளர்கள் இன்றி மகிந்தவுடன் தனியாகப் பேசினார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நேற்று தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.