13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும்படி சிறிலங்காவிடம் வலியுறுத்தினார் மோடி- சுஸ்மா தகவல்
விரைவாகவும், முழுமையாகவும், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், அதற்கு அப்பால் செல்வதன் மூலமும், சிறிலங்காவில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.