மேலும்

நாள்: 23rd November 2014

பாதுகாப்பு விவகாரங்களில் தவறுகளை சகிக்க முடியாது – இந்திய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

பாதுகாப்பு விவகாரங்களில் தவறுகளை இந்தியா சகித்துக் கொண்டிருக்காது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணங்கள் கையில் உள்ளதாம் – மிரட்டுகிறார் மகிந்த

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணக் கோப்புகள் தன்னிடம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்

தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

முதல் பலிக்கடா சசீந்திர ராஜபக்ச? – 4 மாகாணசபைகளின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்

அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாகாணசபைகளின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சியில் கத்தோலிக்கத் திருச்சபை – வாக்குறுதியை மீறும் சிறிலங்கா அரசு

பாப்பரசரின் வருகையை அண்டி தேர்தல் நடத்தப்படாது என்று கத்தோலிக்கத் திருச்சபைக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பாப்பரசரின் பயணத்தை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையையும் உதாசீனப்படுத்தி வருகிறது.

பிரதான முஸ்லிம் கட்சிகளும் எதிரணியுடன் இணையத் தயார்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்தும் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவீரர்களை நினைவுகூர விடமாட்டோம் – சிறிலங்கா இராணுவம், காவல்துறை சூளுரை

வரும் 27ம் நாள் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தும் நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா இராணுவமும், சிறிலங்கா காவல்துறையும் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து சிறிலங்கா அரசு ஆலோசனை

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவுக்கு நன்றி கூறிய மோடி – மீனவர் விடுவிப்பின் பின்னணியில் சல்மான் கான்?

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்ததற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ள நிலையில், இந்த விடுதலையின் பின்புலத்தில் நடிகர் சல்மான் கானும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாரிய கட்சித் தாவல்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பாரிய கட்சித் தாவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.