மேலும்

நாள்: 16th November 2014

இலங்கைத் தமிழரான அமெரிக்க இராணுவ விஞ்ஞானிக்கு அனைத்துலக பொறியியல் விருது

அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது – தி இந்து

கடந்த 25 ஆண்டுகளின் பின்னர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் சமூகத்தின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவின் சென்னையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறிய முதலாவது அரசியற் தலைவராக விக்னேஸ்வரன் நோக்கப்படுகிறார். இவரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரையானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொய் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ச – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொய் கூறியுள்ளதாக சிறிலங்கா சமாதான முயற்சிகளில் நோர்வேயின் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய  எரிக் சொல்ஹெய்ம் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரை – அமைச்சர் வாசுதேவவிடம் பொறுப்பு

வரும் ஜனவரி மாதம் அதிபர் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரைப் பணிகளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஒப்படைத்துள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

வரும் 18ம் நாள் நள்ளிரவு வெளியாகிறது அதிபர் தேர்தல் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்துக்கு எதிராக, வரும் 24ம் நாள் நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன.

3 நிபந்தனைகளுக்கு இணங்கும் வேட்பாளருக்கே ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கி வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தருவதில்லை – சிறிலங்கா மீது இந்தியா விசனம்

சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை பற்றிய தகவல்களை சிறிலங்கா முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று இந்தியா விசனம் தெரிவித்துள்ளது.