மேலும்

நாள்: 28th November 2014

மகிந்த குடும்பத்தை போர்க்குற்ற விசாரணையில் இருந்து பாதுகாப்பேன்– மைத்திரிபால உறுதிமொழி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையோ, அவரது குடும்பத்தினரையோ அல்லது போரை வென்றெடுத்த படையினரையோ, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல தான் அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அஸ்வர் பதவி விலகினார் – அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர், இன்று தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.இவர் தனது பதவிவிலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

சிறிலங்கா அரசு நடத்திய உள்நாட்டுப் போர்முறை மத்திய கிழக்குக்கு பொருந்துமா?

ஆயுதக் குழுவொன்றை முற்றாக அழிப்பதன் மூலமோ அல்லது இராணுவ வெற்றியை நிலைநாட்டுவதன் மூலமோ வெற்றிகொள்ளப்படும் எந்தவொரு யுத்தமும் ஒரு ஆட்சியை சிறந்த வழியில் நடாத்துவதற்கான வழியாக இருக்காது.

பாகிஸ்தானில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி முக்கிய ஆய்வு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருக்கு இன்று பாகிஸ்தான் விமானப்படைத் தலைமையகத்தில் மரபுரீதியான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மருந்து நிறுவனங்களிடம் 100 கோடி ரூபா சுருட்டிய ‘நபர்’ – அம்பலப்படுத்துகிறார் மைத்திரிபால

தேசிய மருந்துக் கொள்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் தடுப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள ஒருவர், 100 கோடி ரூபாவை மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பெற்றுள்ளதாக, முன்னாள் சுகாதார அமைச்சரும், எதிரணியின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் 18 கடற்படைத் தளங்களை அமைக்கும் திட்டம் – சீனா நழுவலான பதில்

சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக வெளியான அறிக்கை குறித்து விசாரணை நடத்தியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

37 அகதிகளுடன் படகை சிறிலங்கா கடற்படையிடம் இரகசியமாக ஒப்படைத்தது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற போது, இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்ரேலியக் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்ட 37 இலங்கையர்கள் நேற்று சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன் கடற்படை இல்லத்தில் சரத் என் சில்வா – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை இல்லத்தில் தங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவை வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடை அவசியம் – ரிச்சர்ட் ஓட்டாவே

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவர் தலைவர் ரிச்சர்ட் ஓட்டாவே தெரிவித்துள்ளார்.