மேலும்

நாள்: 6th November 2014

சிரியாவுக்குச் செல்ல முயன்ற மாலைதீவு ஜிகாதிகள் சிறிலங்காவில் கைது

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்குச் செல்வதற்காக சிறிலங்கா வந்த மூன்று மாலைதீவு பிரஜைகள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் அயல் நாடுகளுடனான உறவில் அரசியல் நாடகங்களா?

கடந்த சில மாதங்களில் பெறப்பட்ட சமிக்ஞைகள், தரவுகளின் அடிப்படையில் இந்தியா குறித்த புதிய பார்வையை ஏற்கனவே ஒருசில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டி உள்ளனர். அவை மோடி அவர்களின் சொந்த அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையிலும், எதிர்கால நோக்கு அறிக்கைகளையும் மையமாக கொண்டு பார்க்கப்பட்டவையே. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.

‘மீறியபெடக் கிராமத்திற்கு மண்சரிவு அபாயங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்படவில்லை’

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் மேலும் பல கிராமங்கள் இவ்விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைக்குள் உள்வாங்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிபர் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பை வரும் 19ம் நாள் வெளியிடுகிறார் மகிந்த

அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 19ம் நாள் வர்த்தமானி மூலம் வெளியிடுவார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

“நாடுகளுக்கிடையே மோதலைத் தூண்டிவிட மாட்டோம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி

நாடுகளுக்கிடையே சிறிலங்கா மோதல்களைத் தூண்டி விடாது என்றும் அவ்வாறு மோதல்களைத் தூண்டுவது, சிறிலங்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் விரோதமானது எனவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அது ஐ.நாவின் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

பிடிவாதத்தை தளர்த்தினார் ரணில் – போட்டியில் இருந்து ஒதுங்க முடிவு

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஐதேக சார்பில், போட்டியிடப் போவதாக கூறி வந்த அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது சீன நீர்மூழ்கி

கொழும்புத் துறைமுகத்தில் ஒரு வாரமாகத் தரித்து நின்ற சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும், போர்க்கப்பலும், நேற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் இன்று தமிழ்நாட்டுக்குப் பயணம் – அரசியல் தலைவர்களை சந்திக்கமாட்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.