மேலும்

நாள்: 18th November 2014

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர்- பீரிஸ் விசனம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

யார் வெளியே சென்றாலும் கவலையில்லை – சிறிலங்கா அரசு கூறுகிறது

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு எவர் வேண்டுமானாலும் வெளியே போகலாம் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

போரில் பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்காவில் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக நோர்வே மீது தாக்குதல் தொடுக்கப்படுவது கடந்த பத்தாண்டுகளாக இருந்து வரும் வழக்கமே என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கடல் பாதுகாப்புக்கு பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பை உருவாக்குகிறது இந்தியா

இந்தியாவைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியத்தைக் கண்காணிக்கும் வகையில், பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பு ஒன்றை இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பிக்கவுள்ளது.

சிறிலங்காவில் மீளவும் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து – அனைத்துலக ஆய்வு எச்சரிக்கை

சிறிலங்கா உள்ளிட்ட 13 நாடுகளில், மீண்டும் தீவிரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக, தீவிரவாதம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சம்பிக்க, கம்மன்பில அமைச்சர் பதவிகளைத் துறப்பு – அரசில் இருந்து விலகியது ஹெல உறுமய

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. (இரண்டாம் இணைப்பு)

போர்நிறுத்த காலத்தில் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ரணில் – அட்மிரல் வசந்த கரன்னகொட

போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொண்ட போது, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கண்ணை மூடிக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட.

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ எந்தப் பேச்சுக்களையும் வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.

முன்னாள் போராளி கொலை: கிராம அலுவலர் உள்ளிட்ட 6 பேர் கைது

மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அந்தப் பகுதி கிராம அலுவலர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

நேற்று முடிவெடுத்தது ஹெல உறுமய – இன்று அறிவிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஜாதிக ஹெல உறுமய தாம் முக்கிய முடிவென்றை எடுத்துள்ளதாகவும், அதுபற்றி இன்று முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.