மேலும்

நாள்: 14th November 2014

சீனக் கடற்படை குறித்து இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும் – இந்தியப் பேராசிரியர் எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில், துறைமுகங்களையும், தளங்களையும் கட்டியமைத்து, பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக, கடற்படைத் தலையீடுகளை விரிவுபடுத்தும் சீனாவின் ஆக்கிரமிப்புத் தொடர்பாக இந்தியா எந்நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தியப் பேராசிரியர் சிறீகாந்த் கொண்டபள்ளி தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைகள் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து அதிருப்தி வெளியிட்டார் பீரிஸ்

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவுடன் சேர்ந்து இந்தியாவின் கோபத்தைக் கிளறாதீர்கள் – சிறிலங்காவுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

குறுகிய அரசியல் நலன்களுக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம்தள்ளி விட்டு, சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் மூலம், சிறிலங்கா ஆபத்தையே விலைகொடுத்த வாங்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கு வருகிறார்

கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அடுத்த மாத துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை – என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சீனக் கடற்படையின் நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – இந்திய கடற்படைத்தளபதி

சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருவது உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில், சீனக் கடற்படையின் செயற்பாடுகளை இந்தியக் கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலை – மன்னார் ஆயர் கண்டனம்!

மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கொழும்புக்கு வருகிறது ரஸ்ய நாசகாரி போர்க்கப்பல்

ரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று நான்கு நாள் பயணமாக இந்த மாத இறுதியில்  கொழும்புத்  துறைமுகத்துக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது மாகாணசபை

சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணிகளின் விபரத்தைத் திரட்டுவதற்காக, வடக்கு மாகாணத்தில், உள்ள காணிகள் தொடர்பான விபரங்களை வடக்கு மாகாணசபை சேகரித்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கூட்டமைப்பு இன்னும் இணையவில்லை – இரா.சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து  வேட்பாளரை நிறுத்தவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.