மேலும்

நாள்: 3rd November 2014

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையே நாளை சந்திப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளை கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று  நடத்தப்படவுள்ளது.

இந்திய, மாலைதீவு கடலோரக் காவல்படைகளுடன் சிறிலங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி

இந்திய மற்றும் மாலைதீவு கடலோரக் காவல்படைக் கப்பல்களுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை நான்கு நாள் கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் நீர்மூழ்கி தரித்திருப்பது வழக்கத்துக்கு மாறானதல்ல – என்கிறது சீன பாதுகாப்பு அமைச்சு

சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல என சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாப்பரசரின் பயணத்தை அண்டி தேர்தல் நடத்த வேண்டாம் – கத்தோலிக்கத் திருச்சபை கோரிக்கை

பாப்பரசர் பிரான்சிஸ் திட்டமிட்டபடி சிறிலங்கா வருவார் என்றும், பாப்பரசரின் வருகைக்குப் பின்னர், அதனை அண்டியதாக தேர்தல் எதையும் நடத்த வேண்டாம் என்று தாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளதாகவும், கத்தோலிக்க ஆயர்கள் கூட்டமைப்பின் ஊடகச் செயலாளரான வண.பிதா. சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

சீன நீர்மூழ்கி மீண்டும் வருகை – இந்தியா கடும் கோபம்

இந்தியாவின் கவலைகளைப் பொருட்படுத்தாமல், சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது, இந்தியாவைக் கோபத்துக்குள்ளாகியுள்ளதாக, இந்திய நாளிதழான எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வத்திக்கான் குழு கொழும்பு வந்தது – பாப்பரசரின் பயணம் குறித்து முடிவு செய்யும்

சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலால், பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்காப் பயணம் குறித்த சந்தேகங்கள் நீடிக்கும் நிலையில், பாப்பரசரின் பயணம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக வத்திக்கானில் இருந்து மூன்று பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்துள்ளனர்.

இரண்டாவது தடவையாகவும் கொழும்பில் சீன நீர்மூழ்கி : ‘வழக்கத்துக்கு மாறானது’ – கேணல் ஹரிகரன்

சீன நீர்மூழ்கிகளின் தொடர்ச்சியான கொழும்பு வருகை புதுடெல்லிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் இன்றும் தொடர்கிறது காணாமற்போனோர் குறித்த சாட்சியப் பதிவு

காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ளது.

கட்டாரில் இருந்து திரும்பிய முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது

கட்டாரில் இருந்து கொழும்பு திரும்பிய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.