மேலும்

நாள்: 29th November 2014

‘சிறிலங்கா அதிபர் அவர்களே உங்கள் பற்றிய கோப்புகள் எம்மிடமும் உள்ளன’

இந்த நாட்டில் நடந்த உண்மைகளைப் பொய்கள் மறைத்திருக்கலாம். ஆனால் இது நீண்ட காலம் நிலைத்திருக்காது. சிறிலங்காவின் பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டின் அழிவுக்கும் பொதுச் சொத்துக்களை ஊறுவிளைவித்தமைக்கும் காரணமாக இருக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

திங்களன்று கொழும்பு செல்கிறார் அஜித் டோவல் – மைத்திரியையும் சந்திக்கிறார்

சிறிலங்கா கடற்படை ஒழுங்கு செய்துள்ள கடல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கூட்டமைப்பை புதுடெல்லி அழைக்கவில்லை – சுமந்திரன்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

ஒப்புக்கொண்டது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியா நோக்கி 37 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதை அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

மகிந்தவுடன் சஜித், சம்பிக்க, கம்மன்பில சந்திப்பு – கோத்தாவும் உடனிருந்தார்

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்துள்ள எதிரணித் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, சஜித் பிறேமதாச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

சென்னையில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான சாகிர் ஹுசேனுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை அடுத்தவாரம் கவிழ்கிறது? – வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும்

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின், மாகாணசபை உறுப்பினர்கள், போர்க்கொடி உயர்த்தியுள்ளதையடுத்தே இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

சரியான பாதையிலேயே செல்கிறதாம் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை சரியான பாதையிலேயே செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.