மேலும்

நாள்: 9th November 2014

“இலங்கையில் அரச வன்முறைகள் இன்னமும் தொடர்கின்றன” – சென்னையில் விக்னேஸ்வரன் உரை [இரண்டாம் இணைப்பு]

இலங்கையில் அரச வன்முறைகள் தொடர்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் இன்று தெரிவித்துள்ளார்.[அவரது முழுமையான உரை இணைக்கப்பட்டுள்ளது.]

சிறிலங்காவுக்கு தொடர்ந்து ஆயுத விற்பனை – பிரித்தானியா மீது குற்றச்சாட்டு

கவலைக்குரிய நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் – சிறிலங்காவுக்கு பாஜக எச்சரிக்கை

நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர்.

பொதுவேட்பாளர் தெரிவில் திணறும் எதிர்க்கட்சிகள்

சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

சிறிலங்காவில் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தல்?

அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சார்பில் இந்திய அரசு நாளை மேல்முறையீடு

போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு மேல்நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் சார்பிலும், இந்திய அரசு நாளை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.

மகிந்தவைப் பதவியில் இருந்து நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.