மேலும்

நாள்: 25th November 2014

20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைய காத்திருக்கின்றனராம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 15 தொடக்கம் 20 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, எதிரணியுடன் இணையவுள்ளதாக, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை தெரிவித்துள்ளார்.

ஐ.நா கண்காணிப்பாளர்களை அழைக்கமாட்டேன் – சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர்

அதிபர் தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா கண்காணிப்புக் குழுவை அழைக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேபாளம் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை நேபாளத்தைச் சென்றடைந்தார்.

புதிய ஆட்சியில் எஞ்சியிருக்கும் புலிகளையும் அழிப்போம் – சூளுரைக்கிறது ஐதேக

சிறிலங்காவில் எதிரணி அமைக்கவுள்ள புதிய ஆட்சியில், அனைத்துலக அளவில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்றும், புலிகளின் கனவு நிறைவேற ஒருபோதும் விடமாட்டோம் என்றும் நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார் ஐதேகவின்  பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

சிறிலங்காவில் 73 ஆயிரம் அடிமைகள் – அனைத்துலக ஆய்வு கூறுகிறது

சிறிலங்காவில் சுமார் 73,600 பேர் தமது உரிமைகளை இழந்த நிலையில் அடிமைகளாக இருப்பதாக அனைத்துலக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான பூகோள அடிமைகள் சுட்டியை, Walk Free Foundation வெளியிட்டுள்ளது.

யாருக்கு ஆதரவு? – நிதானமாக முடிவெடுக்க கூட்டமைப்பு முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும், தமிழ்மக்கள் , சிவில் சமூகத்தினது கருத்துக்களைக் கேட்டறிந்து நிதானமாக முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் ரஸ்ய நாசகாரிப் போர்க்கப்பல்

ரஸ்யக் கடற்படையின் ‘யரொஸ்லாவ் முட்ரி’ என்ற நாசகாரி போர்க்கப்பல் நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மகிந்தவை அனைத்துலக நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல விடமாட்டோம் – ஐதேக சூளுரை

எந்தவொரு சிறிலங்கா தலைவரையும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்க்கட்சியான ஐதேக அறிவித்துள்ளது.

இன்று காலை நேபாளம் செல்கிறார் மகிந்த – நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.