மேலும்

நாள்: 11th November 2014

மேல்முறையீடு செய்தது இந்தியா – மீனவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை

ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரணதண்டனைத் தீர்ப்புக்கு எதிராக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

மூன்றாவது தடவையும் போட்டியிடலாம் – மகிந்தவுக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையும்  அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் ரணில் கோரிக்கை

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யுமாறு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்தவின் மன்னிப்புக்காக ஏங்கி நிற்கும் இந்தியா

கொழும்பு மேல் நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரத்தில், சட்டரீதியான  முயற்சிகளை விட, அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கே, சிறிலங்காவுக்கு இந்தியா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜீவ் கொலை விசாரணையில் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை – முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் அல்லாத தரப்பினரால் மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரியான கே.ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குறித்த அல் ஹுசேனின் கருத்துக்கு பான் கீ மூனும் ஆதரவு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் இந்திய இராணுவக் குழு

இந்திய இராணுவ போர்க் கல்லூரியைச் சேர்ந்த 20 அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் தலையீடின்றி சிறிலங்காவில் எந்த மாற்றமும் வராது – சென்னையில் மாவை

இந்தியாவின் தலையீடு இல்லாமல் சிறிலங்காவில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மோடி – மகிந்த தொலைபேசிப் பேச்சு உண்மையா? – கிளம்பும் சந்தேகங்கள்

சிறிலங்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் விடுதலை குறித்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியது உண்மையா என்ற சந்தேகம், மீனவர்கள் மத்தியில் வலுப் பெற்றுள்ளது.

மீண்டும் போட்டியிட முடியுமா? மகிந்தவுக்குப் பதிலை அனுப்பியது உயர்நீதிமன்றம்

மூன்றாவது தவணைக் காலத்துக்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்த சட்டவிளக்கத்தை, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் நேற்றிரவு அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.